Thu. Nov 20th, 2025

குடியாத்தத்தில் சண்டையால் கூலி தொழிலாளி மரணம்



அக் 21, வேலூர் மாவட்டம் குடியாத்தம்

புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50) மகன் முனுசாமி என்பவர், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கங்கை அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலைக் குறுக்கே சிறுமி லிவி (10) வந்ததால், முருகனின் வாகனம் சிறுமியை மோதியதில் சிறுமிக்கு சிறு காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை நவீன் குமார் (35) S/o பிச்சைமுத்து, செக்குமேடு, கங்கை அம்மன் கோவில் அருகே வசிப்பவர், முருகனை கையால் தாக்கியுள்ளார்.

பின்னர் வீடு திரும்பி படுத்திருந்த முருகன், இரவு சுமார் 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நவீன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

By TN NEWS