வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:
குடியாத்தம் கோட்டையில் விவசாயிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் இன்று வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் உமா சங்கர், தோட்டக்கலை உதவி இயக்குநர் கோபி உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் முன்னிலையாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,

“பருவமழை தொடங்கியுள்ளதால் ஏரிகள், குளங்கள், குட்டைகள் நோக்கி செல்லும் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் உட்பட பணியாளர் தட்டுப்பாடு நீடிக்கிறது; புதிய பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் தக்க விளக்கங்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன், நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன், விவசாய சங்க பிரதிநிதிகள் சாமிநாதன், சம்பத்து நாயுடு, எம்.சேகர், பழனிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் நேர்முக உதவியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
