Thu. Nov 20th, 2025



தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் மாணவர் போலீஸ் படை சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் சிவராம் சில்க்ஸ் உரிமையாளர் K. ராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர், கால்பந்து மற்றும் வளைகோல் பந்து வீரர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கும், மாணவர் போலீஸ் படை மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் இரா. ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார்.
நல்லாசிரியர் பழனிதுரை, முருகேசன் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியர்கள் இளங்கோ, சக்திவேல், கதிரேசன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சீருடைகளை வழங்கிய K. ராமன் அவர்கள், “மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு மற்றும் ஒழுக்கம் இரண்டிலும் முன்னேற வேண்டும்” எனப் பெருமிதத்துடன் உரையாற்றினார்.

செய்திகள்: பசுபதி

By TN NEWS