அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காவெட்டேரியில் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காவெட்டேரி பகுதியில் பழங்குடியினர்களுக்காக தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் இன்று (அக்டோபர் 6) சென்னை மாநிலச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நரிக்குறவர் பழங்குடியினருக்காக நவீன வசதிகளுடன் கூடிய 12 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வீடுகளில் வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பறை, இரும்பு நிலையுடன் கூடிய மரப்பலகை கதவுகள், மின்விசிறிகள், மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை நேரடியாகத் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள், தாட்கோ திட்ட அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
📰 அரியலூர் மாவட்ட செய்திக்காக: எஸ்.பி. ராஜா