Tue. Oct 7th, 2025



தென்காசி நகரத்தில் ரேஷன் கடை பிரிப்பு, கழிவுநீர் ஓடை, தார்ச்சாலை உள்ளிட்ட கோரிக்கைகள்

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21, 24, 25-ஆம் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் வேம்படி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் SDPI கட்சியின் 21-ஆம் வார்டு தலைவர் முகம்மது அசன் தலைமையில் பல்வேறு பொதுமக்கள் நல கோரிக்கைகள் முன்வைத்து மனு அளிக்கப்பட்டது.

🔹 முக்கிய கோரிக்கைகள்:

1️⃣ ரேஷன் கடை பிரிப்பு
21-ஆம் வார்டுக்குட்பட்ட ரேஷன் கடை (DL005PN) 1800-க்கும் மேற்பட்ட கார்டுகளை கொண்டுள்ளது. இதனால் பொருட்கள் பெறுவதில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, கடையை இரண்டாகப் பிரித்து பொதுமக்களுக்கு சிரமமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

2️⃣ கழிவுநீர் ஓடை அமைப்பு
புதுமனை 1-ஆம் தெரு வடக்கு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற்ற வசதி இல்லாததால் சாலைகள் சேதமடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்காக வடக்கு பகுதியில் புதிய கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

3️⃣ புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்
சொர்ணபுரம் தெரு ரயில்வே லைன் மேல்புறம் இருந்து ஜம்ஜம் நகர் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான கோரிக்கையும் மனுவில் இடம்பெற்றது.

4️⃣ புதிய தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்
24-ஆம் வார்டு புதுமனை 5-ஆம் தெருவில் அடிபம்பு பழுதாகி, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின்மோட்டாருடன் கூடிய புதிய தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

5️⃣ குடிநீர் விநியோகத்திற்கு புதிய வால்வு
புதுமனை 5-ஆம் தெருவில் 5 ஆண்டுகளாக குடிநீர் மிகக் குறைவாக கிடைப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்காக புதிய வால்வு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

🗂️ அதிகாரிகளின் பதில்:

மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

👥 கலந்து கொண்டவர்கள்:

தொகுதி செயற்குழு உறுப்பினர் கலீல் ரகுமான், நகர செயலாளர் ஷேக் மைதீன், நகர இணைச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன், நகர பொருளாளர் அஹமது கபீர், செயற்குழு உறுப்பினர் ஜமால் மைதீன், 10-ஆம் வார்டு தலைவர் சதக்கத்துல்லா, ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

🖊️ செய்தி: ஜெ.அமல்ராஜ், மாவட்ட தலைமை நிருபர், தென்காசி.

By TN NEWS