அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் அருகே மர்மமான முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (45) என்ற விவசாயி, தனது மனைவி ஷோபனா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவர் சேம்பள்ளி காட்டுக் கொள்ளை பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்திலும், அருகில் ஆம்பூரைச் சேர்ந்த மீரான் என்பவருக்கு சொந்தமான நிலத்தையும் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அந்த நிலத்தில் வேர்க்கடலை பயிர் செய்து வந்த அவர், வனவிலங்குகள் சேதப்படுத்தும் அச்சத்தால் இரவு நேரங்களில் நிலத்திலேயே தங்கியிருந்து காவல் பார்த்துவருவதாக தெரிகிறது.
ஆனால் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பாததால், மனைவி ஷோபனா அவரைத் தேடி நிலத்துக்குச் சென்றார். அங்கு காணவில்லை என்பதால் உறவினர்களுக்கு தகவல் அளித்து பல இடங்களில் தேடியபோது, அருகிலுள்ள சாந்தி என்பவரின் நிலத்தில், கட்டிலில் கை கால் கட்டப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சாந்தி என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இதையடுத்து, அந்த நில உரிமையாளர் சாந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல்: கே.வி. ராஜேந்திரன்
தாலுக்கா செய்தியாளர் – குடியாத்தம்