Fri. Nov 21st, 2025



அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மனு

அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் ஒன்றியம் தாட்டிமானபல்லி ஊராட்சியில், பஸ் நிறுத்தத்தில் M.P. – CDS திட்டத்தின் கீழ் பயணிகளுக்காக நிழற்கூடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிழற்கூட கட்டுமானத்தில், அரசு கட்டுமான விதிமுறைகளுக்கு மாறாக பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி, திட்டத்தின் பெயர் பலகை தரையில் இருந்து இரண்டு அடி உயரத்திற்குள் சிறிய கல்வெட்டு வடிவில் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் இங்கு, அது 8 முதல் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பது விதிமுறை மீறலாகும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க. புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ். எஸ். ரமேஷ்குமார் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு மனு அளித்து,
அரசு வழங்கிய வழிகாட்டுதலின்படி சரியான அளவில் கல்வெட்டு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில், தனகொண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் என். மோகன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் செ.கு. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்: கே.வி. ராஜேந்திரன், தாலுக்கா செய்தியாளர் – குடியாத்தம்

By TN NEWS