புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI
தென்காசி, அக்டோபர் 2:
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
இப்பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் எலுமிச்சை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் அடிக்கடி யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி புளியங்குடியில் எலுமிச்சை தோட்டத்தில் பணிபுரிந்த சேகம்மாள், ராமலட்சுமி, அம்பிகா ஆகியோர் கரடி தாக்கியதில் படுகாயமடைந்தனர்.
சமீபத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வாசுதேவநல்லூர் பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி என்பவர் காட்டெருமை தாக்கி உயிரிழந்த சம்பவம், விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகளை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று SDPI கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் நூர்முகம்மது வலியுறுத்தியுள்ளார்.
🖋️ ஜெ. அமல்ராஜ் – மாவட்ட தலைமை நிருபர், தென்காசி