தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே புட்டிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் கு. மணி அவர்கள் தலைமையேற்று, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவநதி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
முகாமின் துவக்க நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கினர். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பின்வரும் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன:
பள்ளி வளாகம் சுற்றுச்சூழல் பராமரிப்பு
மரக்கன்று நடுதல் மற்றும் பனை விதை நடவு
சாலை தூய்மைப்படுத்தும் பணி
மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
யோகா பயிற்சி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு வழிகாட்டல்
பெண்களை கேலி செய்வது, கிண்டல் செய்வது தொடர்பான போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு
முகாம் நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை நன்றியுரை வழங்கி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
✍️ பசுபதி
தலைமை செய்தியாளர்