Sun. Oct 5th, 2025



அரூரில் ஜேசிஐ சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி

அரூர் அருகே பசுமை வளத்தைப் பாதுகாப்பதற்காக ஜேசிஐ அரூர் கிளையிக்கம் வருடா வருடம் பனை விதை நடும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆண்டு, கோபிசெட்டிபாளையம் நாயக்கன் ஏரி மற்றும் சிக்கம்பட்டி ஏரியில் 1,200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அரூர் துணை வட்டாச்சியர் திரு. இரஞ்சித்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியை ஜேசிஐ அரூர் கிளை தலைவர் JC சிற்றரசு தலைமையில், திட்ட இயக்குநர்கள் JC செந்தில், JC ஜெயகாந்தன், JC சுரேஷ், JC சி.சிற்றரசு, JC பூவரசன், JC விஜயன், JC பூபாலன், JC மாரியப்பன், JC சீனிவாசன், JC பழனிசாமி, JC பொன்னுசாமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

நிகழ்ச்சியில் ஜேசிஐ உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டு பங்கேற்றனர்.

✍️ பசுபதி
தலைமை செய்தியாளர்

By TN NEWS