200-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை:
குடியாத்தம், செப்.28:
பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நியூ டைமண்ட் மெடிக்கல்ஸ் மற்றும் சுவாமி மெடிக்கல் இணைந்து இன்று குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு சுவாமி மெடிக்கல் Rtn. P.L.N. பாபு தலைமை தாங்கினார். ஏ. நவிதா பர்வீன், முஷிரா, இர்பான் M.C., K.O. முக்தியார் கான், அன்வர் M.C. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நியூ டைமண்ட் மெடிக்கல்ஸ் சார்பில் K.O. சுல்தான் கான் வரவேற்றார்.
முகாமை நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். இதில் அரசு வழக்கறிஞர் எஸ். பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் பெரிய கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் இதய நோய், ரத்தக் கொதிப்பு, சக்கரை நோய், ஆஸ்துமா, கண் குறைபாடுகள், பிறவிக் கண் புரை, விபத்தால் கருவிழி பாதிப்பு போன்றவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்.
✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்