Sun. Oct 5th, 2025

📰 குடிநீர் பைப் லைனுக்கு மாலை அணிவித்து நல்லடக்கம் – ஆவுடையானூரில் அதிர்ச்சி நிகழ்வு…!

தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் பைப் லைன் பழுதுபார்க்காததை எதிர்த்து அதிர்ச்சிகரமான வகையில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சேகர், அங்கு அதிமுகவின் கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய வீட்டில் உள்ள குடிநீர் குழாய் கடந்த 10 நாட்களாக பழுதாகி இருந்ததால், அதனை சரி செய்யும்படி ஊராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த சேகர், அந்த தண்ணீர் குழாய்க்கு மாலை அணிவித்து நல்லடக்கம் செய்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
“கட்சி பார்த்து பாரபட்சம் காரணமாக என் வீட்டுக்கான குடிநீர் குழாய் பழுதை அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இதே பகுதியில் வசிக்கும் ஒன்றிய கவுன்சிலரும், வார்டு கவுன்சிலரும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை” எனக் கூறினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்டம்
தலைமை செய்தியாளர்

By TN NEWS