Sun. Oct 5th, 2025



பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வி.ஐ.பி. வாகனத்தில், தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் அரசு விதிகளை மீறி முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மாவட்ட நிர்வாக வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

அமல்ராஜ் – தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS