Sun. Oct 5th, 2025

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி – சிங்கல்பாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், உள்ளி – சிங்கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது.

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பெயர் மாற்றம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் மனுக்கள் முகாமில் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், தாசில்தார் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், துணைத்தலைவர் சதீஷ்குமார், சிங்கல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், துணைத்தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய் ஆய்வாளர் புகழரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கடாஜலபதி, செந்தில், சசிகுமார், காந்தி, அருள் பிரகாசம், ரமேஷ், காஞ்சனா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்றனர்.

🖋 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS