Sun. Oct 5th, 2025

அனைவருக்கும் வணக்கம், விழிப்புணர்வு தொகுப்பு…!


புதிய வரி் GST 2.0  மாற்றம் நேற்று முதல் (22/09/2025) அமல்படுத்தபட்டுள்ளது. அனைவரும் அதை பின் பற்றி தங்கள் வணிகத்தை தொடர வாழ்த்துக்கள்.

தற்போது GST மூலம் வணிகர்களுக்கு பல விதமான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு விளக்கமும் ஆதாரமும் வைத்து அதற்க்கான பதில் அளிக்கும் படி கேட்டு உள்ளதை தொடர்ந்து:
கீழ்கண்டவற்றுக்கு அதிக நோட்டீஸ்கள் வந்த வண்ணம் உள்ளது.

அதில் வரி இல்லா பொருள் விற்பனை செய்து அதை நாம் GSTR ல் தாக்கல் செய்து இருந்தால்…?
அதனை விபரமாக HSN CODE முறைபடி விற்பனைக்கும் கொள்முதலுக்கும் பில்களை மாதிரி வைத்து பதில் அளிக்க வேண்டும்.

மேலும் சொந்த  உபயோகத்துக்கு வாங்கிய பொருட்கள் விலை உயர்ந்த பொருட்களுக்கு தொழில் சார்ந்த GSTIN ஐ பயன் படுத்தி வாங்கி இருந்தாலோ அதற்க்கு ITC கோர முடியாத வகைகளுக்கு அதை கண்டறிந்து அதிகாரிகள் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் வருகிறது.

இதற்க்கு தக்க ஆதாரத்துடன் அது Eligible ITC தான் என்பதை உறுதிபடுத்த அதை இணைத்து பதில் அளிக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் அது  Eligible என்றால் அதிகாரி அந்த பதிலை ஏற்று உத்தரவு பிரப்பித்து உங்கள் நோட்டீஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்தாகும்.

அதே நேரத்தில் அது ஏற்க்க தக்கதல்ல நாம் அதை Claim பண்ணி் இருந்தால் அதை Reverse பண்ண வேண்டும் அதாவது திரும்ப செலுத்த வேண்டும்.
இதில் திரும்ப செலுத்தும் பட்சத்தில் எந்த மாதம் இந்த தவறு நடந்து ரிட்டனில் தாக்கல் செய்தோமோ அந்த மாதம் முதல் வட்டியுடன் அசல் வரியும் சேர்த்து கட்ட வேண்டிய நிலை் உள்ளது. இதற்க்கான தண்ட தொகை குறைந்த பட்சம் 20,000/- வரை விதிக்கப்படும்.

*அடுத்து*


வாடகை இடத்தில் குடி இருக்கிறோம் என்றால் RCM முறையில் அதற்க்கான 18% GSTயை கட்டி நாம் ITC எடுத்து கொள்ளலாம் என ஏற்கனவே சட்டம் உள்ளது, இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2024 அக்டோபர் முதல் செய்ய வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க பட்டது.  இதில் வாடகைக்கு GST பெற்று கொண்டு முறையாக இன்வாய்ஸ் கொடுக்கும் கட்டிட உரிமையார்கள் பலரும் இருக்கிறார்கள் அவர்கள் நாம் கட்டும் GSTயை அவர்களது GSTR1ல் தாக்கல் செய்வதால் நாம் RCM கட்டாமல் நேரடியாக அதை கழிக்க GST வழிவகுத்து உள்ளது.

ஆக GST RCM ON RENT செலுத்தாவர்களுக்கும் தற்போது நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

இதற்க்கும் குறைந்த பட்சம் அக் 2024 முதல் கட்டி அதற்க்கு வட்டியும் அடைத்து விட்டால் தண்டம் தவிர்க்கலாம். ( நோட்டீஸ் வரும்முன்)

*அடுத்து*

வியாபார அபிவிருத்திக்கும் பண மதிப்புக்கும் கொண்டு வரபட்ட UPI அதாவது Gpay Phone pe போன்ற App கள் மூலம் விற்பனைக்கு பணம் பெறும் போது அது வியாபாரமாக இருப்பின் 40 லட்சமும் சேவைகளாக இருப்பின் 20லட்சத்துக்கும் மேலாக இருந்தால் GST கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் விளக்கம் கோரி் நோட்டீசுகள் வருகிறது.

மேலும் GST நம்பர் வைத்து இருந்து முறையாக நடைமுறை வங்கி கணக்கு பராமரிப்பு செய்து அதில் UPI மூலம் பணபரிவர்தணை செய்து இருந்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் விற்பனை பில் போட்டு் அது BTOB OR BTOC ,ல் மாதாந்திர ரிட்டனில் தாக்கல் செய்து இருக்க வேண்டும். இதில் எதாவது வித்தியாசம் கண்டு பிடித்து நோட்டீஸ் பெற்றால் அதுவும் விளக்கமளித்து அல்லது வித்தியாசத்துக்கு வணிகத்தை பொருத்து Rate of tax படி வரி வட்டி அபராதம் செலுத்த நேரிடும்.

மேற்கூறிய அனைத்தும் வணிகர்களின் நலனுக்காக மட்டுமே.

மேலும் நாங்கள் எங்கள் பயிற்ச்சியின் மூலம் இது போல் நோட்டீஸ்களை சந்தித்து அதன் தீர்வு காண கடுமையாக போராடி வருகிறோம்.

அதனால் வரும் முன் காப்பது என்றும் சிறந்தது…

நன்றி
அன்புடன்
K M ஷாஜஹான்
ஷாஜஹான் & கம்பெனி – கோவை
TAXHUT CBE
9865005553
9865255511

நன்றி சகோதரர் அவர்களுக்கு…! எனது வேண்டுகோளை ஏற்று விளக்கம் தந்து தங்களது தொடர்பு எண்ணும் தந்தமைக்கு வாழ்த்துக்கள் 💐

எங்களது மீடியா வாயிலாக பிரசுரித்து சிறு குறு தொழில்கள் செய்து வரும் தோழமைகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

தற்போது GST துறை அனைத்து சிறு குறு வியாபாரம் செய்யும் சகோதரர்கள் UPI மூலமாக அதிக அளவிலான பரிவர்த்தனைகள் செய்து வருவதினால் GST மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களுக்கு உதவியாக இருக்கும் இந்த விளக்கம்.

சேக் முகைதீன் 

By TN NEWS