தமிழக முதல்வருடன் 1231 கிராம சுகாதார செவிலியர்கள் குழு புகைப்படம்
சென்னை:
தமிழகத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்ற 1231 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்நியமன ஆணைகளை வழங்கியதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நியமனங்கள், ஊரக பகுதிகளில் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Masubramanian #TNHealthMinister #DMK4TN #VillageHealthNurses
சேக் முகைதீன்.