கன்னியாகுமரி மாவட்டச் செய்தி:
விவசாயிகள் போர்வையில் ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை நடந்ததற்கு அமலாக்கத்துறை விசாரணை கேட்டு அக்டோபர் 2 மக்கள் சந்திப்பு துவங்குகிறோம்..!!!!
கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது!!!.
கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சிபிஐ எம்எல் ரெட் ஸ்டார் கட்சியும் இணைந்து மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் சிலையிலிருந்து துவங்கி 15 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களை சந்திக்கிறோம்+++
(1) ஆயிரம் கோடி வண்டல் மண் முறைகேடு கண்டித்து மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களிடம் கொடுத்த மனுவுக்கு அமலாக்க துறை விசாரணை கேட்டும்?????
(2) கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை ஆதிதிராவிடர் மக்களுக்கு தனித் தொகுதியாக அறிவிக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும்!!!
(3) பேருந்து நிலையங்கள் பேருந்து நிறுத்தங்கள் வணிகப் பகுதிகள் வழிபாட்டுத் தலங்கள் குடியிருப்பு பகுதிகள் பள்ளி கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் சாராயக் கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தை கேட்டும் @@@@@
(4) ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை திறந்து வழிபாட்டுக்கு விட கேட்டும்&&&&&
(5) உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல் முறைகேடு கண்டித்தும்????
(6) தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம் ஒருமுறை மின் கட்டண வசூலை கொண்டு வர கேட்டும் ₹₹₹₹₹₹
(7) ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் ஏற்ற வலியுறுத்தியும்!!!
(8) இந்திய தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்யகேட்டும்????
(9) செண்பகராமன் புதூர் பொய்கை அணையின் நீர்மட்டத்தை உயர்த்த குஞ்சான் ஓடை மற்றும் குதிரை பாஞ்சான் ஓடை இரண்டையும் தூர்வாரி நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தியும்++++
(10) கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்தை வளர்த்த 33 சிறு பாசன திட்டங்கள் ஆய்வு செய்து நிறைவேற்றாமல் இருப்பதை நிறைவேற்ற வலியுறுத்தியும்@@@
(11) 16 கோடி செலவில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைத்து ஐந்து வருடம் ஆகியும் துவங்காமல் இருப்பதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தியும்.!!!
(12) கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பதை தடுப்பதற்கு தென் திருவாங்கூர் மன்னர் காலத்தில் செயல்பட்டு வந்த ஏவிஎம் சானலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து நிலத்தடி நீரை பாதுகாப்பது மட்டுமில்லாமல் சுற்றுலா மூலம் வருமானத்தை அரசுக்கு உயர்த்த வலியுறுத்தியும்!!!!
வரக்கூடிய அக்டோபர் இரண்டாம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் சிலையில் இருந்து மகா சன்னிதானம் புஜிதகுரு பால பிரஜாதிபதி அடிகளார் துவங்கி வைக்கிறார் 15 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களை சந்திக்க இருக்கின்றோம் நிறைவாக ஐயா ஜீவா சிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் திருமாவளவன்MP மற்றும் சி பி ஐ எம் எல் ரெட்ஸ்டார் தேசிய தலைவர் கலந்துகொண்டு நிறைவுறையாற்று இருக்கிறார்கள் தோழர்களும் பொதுமக்களும் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்.