Sun. Oct 5th, 2025



வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டியப்ப ஆச்சாரி வீதியில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து கடஸ்தாபன ஊர்வலம் துவங்கப்பட்டது. இவ்விழாவிற்கு விஸ்வகர்மா ஜெகத்குரு ஈசான்ய சிவம் ஸ்ரீ வித்யா உபாசகர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவ சிவ சிவ ராஜ சுவாமிகள் தலைமை தாங்கினர்.

முக்கிய நிகழ்வுகள்:

குடியாத்தம் விஸ்வகர்மா சமுதாய நல சங்க தலைவர் எம்.அசோக்குமார், கே.இன்பநாதன், எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் சர்வேஸ்வரன் ஆச்சாரி, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், நகர மன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், 28-வது வார்டு உறுப்பினர் ஜி.எஸ்.அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அறங்காவலர் எம்.பார்த்தசாரதி ஆச்சாரி அவர்கள் விநாயகர் கோவில் சமூக கொடியை ஏற்றினார்.

முன்னாள் அறங்காவலர் எம்.என்.ஜோதி குமார் ஆச்சாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்கள் காளியம்மன் தாயாரை தரிசனம் செய்தனர்.


மேளதாளம், பம்பை, செண்டை மேளம் முழங்க ஊர்வலம் காமாட்சி அம்மன் பேட்டை, காந்தி சவுக், நேதாஜி சவுக், சந்தைப்பேட்டை பஜார் பஸ் நிலையம் வழியாக வந்து ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தை வந்தடைந்தது.

கலந்து கொண்டோர்:

சங்க செயலாளர் பக்தவச்சலம், பொருளாளர் குமரேசன், எம்.சண்முக ஆச்சாரி, ருத்ர கோட்டி ஆச்சாரி, ஹரிபாபு, ஜெகநாதன், எம்.எஸ். நாகையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் நவராத்திரி விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

📸 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS