தேர்தலில் போட்டியிட வில்லை என அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்..!!
இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்..!!
===================================
தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தைக் கூறி நாட்டில் மக்கள் பணியாற்றி வரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (RPA, 1951) பிரிவு 29A இன் படி நாட்டில் செயல்டும் அரசியல் கட்சிகள் இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப் படுகின்றன.
அப்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடாததற்காக அந்த கட்சியின் பதிவை ரத்து செய்ய RPA, 1951 வெளிப்படையாக ECI-க்கு அதிகாரம் அளிக்கவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் vs. சமூக நல நிறுவனம் (2002) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர, ECI ஒரு அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது,
1) மோசடி அல்லது போலியான தகவல்ள் மூலம் ஒரு அரசியல் கட்சி பதிவு பெறப்பட்டிருந்தால் அந்த கட்சியின் பதிவை ரத்து செய்யலாம்.
2) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் ஒரு கட்சி சட்டவிரோதமானது என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டால் அதன் பதிவை ரத்து செய்யலாம்.
3) அல்லது பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதன் அரசியலமைப்பை திருத்தி, விதிகளை மீறி, இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட்டால் அதன் பதிவை ரத்து செய்யலாம்.
இதுவல்லாமல் ஒரு அரசியல் கட்சி தேர்தல்களில் போட்டியிடாமல் இருப்பதை மட்டும் காரணம் காட்டி அதன் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியாது.
மேலும் 1968 ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் கீழ், ஒரு கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட வில்லை என்றால், அது மாநில அல்லது தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்க நேரிடும். அதாவது, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை இழக்க நேரிடும்.
ஆனால் அது அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே இருக்கும்.
ஒரு கட்சிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், பதிவை ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் பொதுவாக முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். இதுதான் சட்டம்.
இந்நிலையில் இது குறித்த சோக்காஸ் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு அதற்கு உரிய பதில் அளிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் சில அரசியல் கட்சிகளின் பதிவையும் இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்து உள்ளது. யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த நடவடிக்கை?
சுமார் 42 கட்சிகளின் பதிவை இவ்வாறு ரத்து செய்துள்ளதாம். இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். அரசியல் கட்சிகளை அடக்கி ஆளும் அராஜகப் போக்காகும்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஓட்டு திருட்டு மோசடி உள்ளிட்ட புகார்கள் தேர்தல் ஆணையத்தை மீது இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது நம்பிக்கை தன்மையை முதலில் உறுதி செய்யட்டும்.
எனவே இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் இத்தகைய சட்ட விரோத பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரத்து அறிவிப்பை திறும்பப் பெற வேண்டுகிறோம்.
யாருடைய அழுத்தத்திற்கும் ஆட்படாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டிய இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம், சட்டப்படி நீதியாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவண்
காயல் அகமது சாஹிபு M.A., L.L.B
மேலிடப் பொறுப்பாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தேசியக் குழு உறுப்பினர்,
இந்திய பத்திரிக்கையாளர் சங்கம்
நாள் : 20-09-2025
@highlight
Ahamed Sahib
Thol.Thirumavalavan
M. K. Stalin Jawahirullah MH
#vckitwing #VCK_SOCIAL_MEDIA #Vck
சேக் முகைதீன்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்