செப்டம்பர் 19
குடியாத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு போலி மருத்துவர்கள் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்பு புகார் வந்ததையடுத்து
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவர் சதீஷ் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் குழு மற்றும் குடியாத்தம் நகர போலீசார் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
அப்போது முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவ பார் கவுன்சிலில் பதிவு செய்யாமலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பெல்லியப்பன் (51 )துக்காராமன் (53) ஜோதிப்பிரியா (40) ரேவதி ( 36) ஆகிய நான்கு பேரை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் அவர்களிடமிருந்த மருந்து மாத்திரைகள் ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் ஜோதி பிரியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார் இது சம்பந்தமாக
போலி மருத்துவர் ஜோதி பிரியா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்