Sun. Oct 5th, 2025

பைக்கை இடித்த எஸ்ஐ கார் – நியாயம் கேட்ட நபரை 200 மீட்டர் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலி:

நேற்று இரவு திருநெல்வேலி டவுன் அருகே அரசு பேருந்து மீது மோதாமல் திடீரென பிரேக் பிடித்த இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த காவலரின் கார் மோதியது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் நியாயம் கேட்டபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் தனது காரை வேகமாக செலுத்தி அந்த நபரை கார் பேனட்டில் ஏற்றி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மோசமான செயல் தொடர்பாக, குறித்த எஸ்ஐ காந்தி ராஜன் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியாகவும் குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS