Sun. Oct 5th, 2025

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று 15 எம்.பிக்களும், 2 அமைச்சர்களும் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

என்னை முன்னிறுத்தி, தமிழக அரசியல் களம் சீமான் – திமுக இடையே மாறிவிடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. அது நடக்கிறது என தெரிந்ததும், மீண்டும் பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைத்து சேர்ந்துவிட்டார்.

சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றியும் விட்டார்” என சீமான் குற்றம்சாட்டினார்.

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS