18 செப்டம்பர் 2025 | வேலூர்
வாக்கு திருட்டு மற்றும் மோசடி மூலம் ஆட்சி அமைத்ததாகக் கூறி, பாஜக அரசையும் அதற்கு துணை போன இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. சுரேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 1,00,000 பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் வீராங்கன், சங்கர், ஜோதி கணேசன், செல்வகுமார், தாண்டவமூர்த்தி, வட்டார பொறுப்பாளர் ஆரோன், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், பாரத் நவீன்குமார், யுவராஜ், செந்தில், பள்ளிக்கொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் NMD. விக்ரம், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோமதி குமரேசன், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் அன்பரசன், ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், கலைப் பிரிவு தலைவர் காத்தவராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், RGPRS மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், எஸ்சி பிரிவு மாநில செயலாளர் சுப்பிரமணி, குடியாத்தம் நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் நவீன்பிரபு, இலியாஸ் பாஷா, ரங்கநாதன், சத்தியமூர்த்தி, புஷ்பாகரன், மனோகரன், மணிவேல், ரஜினிகாந்த், கோவிந்தசாமி, முகம்மது உசேன், உமாபதி, ஸ்டாலின், சலீம், தேவராஜ், ஜெயராமன், பாலாஜி, செல்வக்குமார், சவுந்தர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்