Sun. Oct 5th, 2025



குமரி – செப்டம்பர் 16

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.3500 கோடி மதிப்புள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் திரு. என். சுரேஷ்ராஜன் வழங்கி சிறப்பித்தார்.

இந்த திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்துவதோடு, அவர்களுக்கு நிதி ஆதரவும் வழங்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

#சேக்முகைதீன் – தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
#Dmkkanyakumari
#NSureshrajan

By TN NEWS