Sun. Oct 5th, 2025



தென்காசி – செப்டம்பர் 16

தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசை அருகே உள்ள தனியார் பள்ளியில், வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டது.

மேலும், பள்ளியில் சிறப்பு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“மாணவர்களின் கல்வி நேரத்தில், குறிப்பாக தேர்வு நடைபெறும் வேளையில் அரசு நிகழ்ச்சிகளை பள்ளி வளாகத்தில் நடத்தக்கூடாது. பள்ளி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதபடி திட்டங்களை நடத்த அரசு கவனம் செலுத்த வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமல்ராஜ்

தலைமை செய்தியாளர்

தென்காசி மாவட்டம்.

By TN NEWS