Sun. Oct 5th, 2025



தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருமனூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் மயில் ராணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கீழபாரு யூனியன் தலைவர் காவேரி, சீனித் துறை ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், துணைத்தலைவர் அருள்செல்வி பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், உறுப்பினர்கள் அபிராமி, ராஜேஸ்வரி, திருமலை வடிவு, கோகிலா மோகன், மாரிச்செல்வம், மாரி ராஜன், அருள்செல்வி, ஆணையாளர் ராதா திருமலை, விஜய் கணபதி, சுப்பையா, ஊராட்சி உதவிச் செயலர்கள் நடராஜன், முத்துமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் பட்டா மாற்றம், சொத்துவரி, குடிநீர், வரைபடம், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS