சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடுகோரியும் மாவட்ட ஆட்சியரிடம் SDPI கோரிக்கை மனு..!
#தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொ ழி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இது சம்மந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் , மனு அளித்தும் இதுவரைக்கும் முறையான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீ டு கேட்டு விவசாயிகள் கோரிக்கை வைத்தும் எவ்வித இழப்பீடும் வழங்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாக்கியுள்ளனர்.
மேலும் காட்டு யானைகளை தொடர்ந்து தற்போது கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் விவசாய நிலங்களுக்குள் செல்வதற்கு விவசாயிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஆகவே வன விலங்குகள் வேளாண் நிலங்களுக்குள் புகுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி #SDPI கட்சியின் வேளாண் அணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகம்மது காசிம் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் இணை ஒருங்கிணைப்பாளர் அன்சாரி, கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் முகம்மது நைனார், மாவட்ட பொதுச் செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஷேக் முகம்மது ஒலி,SDTU தொழிற்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது இஸ்மாயில், தென்காசி தொகுதி தலைவர் பீர்முகம்மது, நகர செயலாளர் ஷேக்மைதீன், நகர பொருளாளர் அஹமது கபீர், கிளை தலைவர் அசன், வடகரை நகரதலைவர் இஸ்மாயில், நகர செயற்குழு உறுப்பினர் ஹாஜா ஷரீப், ரகுமானியாபுரம் கிளை தலைவர் இஸ்மாயில் மைதீன், செயற்குழு உறுப்பினர் முகம்மது இலியாஸ், கிழக்கு கிளை பொருளாளர் முகம்மது அலி, உதயசெல்வன்பட்டி கிளை தலைவர் குமார், விவசாயிகள் முகம்மது ஹனிபா, சலீம், அபூபக்கர், கனி, ஷேக்உசேன், முத்தையாசாமி, முருகையாபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்