Sun. Oct 5th, 2025

 

🖤❤️ பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா சித்தாலப்பாக்கத்தில் கொண்டாட்டம்

சென்னை சித்தாலப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 15) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வை முன்னிலை வகித்தவர்கள், அண்ணாவின் தமிழுக்கும் சமூக நீதிக்கும் செய்த பணிகளை நினைவுகூர்ந்து, அவரது வழியிலேயே மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள உறுதி எடுத்தனர்.

✍️ R. தியாகராசன்
தமிழ்நாடு டுடே செய்திகள்

 

By TN NEWS