இந்தியாவின் முதல் பயணிகளின் கார்களை ஏற்றி செல்லும் ரயில் சேவையை கொங்கன் ரயில்வே (CAR FERRY TRAIN) மஹாராஷ்டிராவில் கொலாட் நகரில் இருந்து கோவாவிற்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது – இது புத்திசாலித்தனமான, தடையற்ற பயணத்தை நோக்கிய ஒரு துணிச்சலான படியாகும்.
இந்த முயற்சி சாலை நெரிசலைக் குறைக்கிறது, அதே நேரத்தில் நீண்ட தூர கார் போக்குவரத்திற்கு ஒரு அழகிய, திறமையான மாற்றங்கள் வழங்குகிறது.
இதே போல் தமிழ்நாட்டிலும் சென்னை – மதுரை, சென்னை – கோவை மற்றும் பெங்களூர் – கோவை இடையே கார்களுடன் பயணிக்கும் ரயில் சேவையை அறிமுகப்படுத்தினால், தொடர் விடுமுறை காலங்களிலும், பண்டிகை காலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கலாம். மக்களுக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு கார்களில் பயணிக்கும் வசதியும் கிடைக்கும்.
இது நீண்ட சாலைப் பயணத்தை குறைத்து, மிகக் குறுகிய பயணமாக மாற்றும்.
சௌகரியம் மற்றும் வசதி:
பயணிகள் தங்கள் வாகனங்கள் கொண்டு செல்லப்படும் போது வசதியாக ரயில் பெட்டிகளில்
பயணிக்கலாம்.
குறைவான மன அழுத்தம்:
நெரிசலான நெடுஞ்சாலைகள் மற்றும் அதிக போக்குவரத்து வழித்தடங்களில் வாகனம் ஓட்டுவதில் உள்ள சவால்களை நீங்கள் தவிர்க்கலாம்.
குறைக்கப்பட்ட நெரிசல்:
பிரபலமான வழித்தடங்களில், குறிப்பாக உச்ச பயணக் காலங்களில் போக்குவரத்தைக் குறைக்க இந்த சேவை உதவுகிறது.
பாதுகாப்பான பயணம்:
இது சவாலான கடலோர சாலைப் பாதைகளில் கார்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு ஆட்டோமொபைல் தொழிலில் உள்ள நிபுணர்களுக்கு, இது ஒரு புதிய வியாபார பாதையை உருவாக்கி தொடங்க சமிக்ஞை செய்கிறது – இது இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்து பார்வையின் பிரதிபலிப்பாகும்:
Southern Railway Salem Division Southern Railway தெற்கு ரயில்வே சேலம் கோட்டம்
சேக் முகைதீன்