Sun. Oct 5th, 2025

*கியரை மாற்றும் எஸ்டிபிஐ:*

தமிழ்நாட்டில் மிகவும் புகழ்மிக்க மாநகரங்களில் திருச்சியும் ஒன்று. அங்கு இரண்டு தரப்பு கூடுகைகள் ஒரே நாளில் வெவ்வேறு திசைகளில் சங்கமிக்கிறது. ஒன்று வெளியரங்கிலும் மற்றொன்று உள்ளரங்கிலுமாக அதன் வளர்ச்சியை நோக்கி அடுத்த கியரை மாற்றுகிறது.

வெளியரங்கில் நடைபெற்ற கூடுகைகள் ஆளும் தரப்புக்கு சவாலாகவும், உள்ளரங்கில் நடத்தப்பட்ட கூடுகைகள் அதே ஆளும் ஆட்சியாளர்களுக்கு தங்களின் அரசியல் பலத்தை பறைசாற்றும் விதமாகவும் நேரெதிராக பிரதிபலித்தது.

இதில் தமிழக அரசியல் கட்சிகளின் பார்வைக்கு, தனது சட்டமன்ற மற்றும் மக்களவை எண்ணிக்கையை தொடங்க காத்திருக்கும் எஸ்டிபிஐ கட்சி, கணக்கிலடங்காத சில ஒழுக்க நெறிமுறைகளை தான் பெற்ற பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது, ஊராண் பிள்ளைகளுக்கும் அதை ஊட்டியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும், அதை எப்படி திட்டமிட வேண்டும், அந்த மாநாட்டின் மூலமாக என்ன கற்பிக்க வேண்டும், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதையெல்லாம் இம்மாநாடு பலருக்கு பாடமாக்கியிருக்கிறது.

பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தினால் முதலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பின் அவர்கள் கடந்து செல்லும் பாதை நெடுக பிறருக்கு தொல்லை ஏற்படும், அவ்வழியே இருக்கும் மதுபானக்கடைகள் நிரம்பி வழியும், பெட்டிக்கடைகளில் கூட்டம் அலைமோதும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென மாநாட்டு திடலுக்கு முந்தைய பிந்தைய வழிகளெல்லாம்  கபளீகரமாக காட்சியளிக்கும்.

வெளி-மாவட்டங்களிலிருந்து வரும் தொண்டர்கள் வாகனங்களின் மீதேறி சலசலப்புகளை ஏற்படுத்துவர். தான் சார்ந்த கட்சிகளின் பெயரையும் அதன் தலைவர்கள் பெயரையும் கூறி கூச்சலிடுவர். மாநாடு திடலுக்கு அனைவரும் வந்து சேருவதற்கு முன்னரே மாநாட்டின் வீரியத்தை கூட்டுவதாக நினைத்து அதை கூட்டு வன்-புணர்வு செய்வர். இப்படியாக எந்த சலசலப்புகள் விவாதங்கள் தொல்லைகள் என எதுவுமே இல்லாமல், எதற்காக இந்த மாநாடோ அதை மட்டுமே நோக்கி அமைதியாக நடத்தி முடித்திருக்கிறது எஸ்டிபிஐ.

*மிட்டாய்’க்காக அழும் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலுக்காக அழும் குழுந்தைகளுக்குமான வித்தியாசம்தான் எஸ்டிபிஐ கட்சி நேற்று நடத்திய 234 தொகுதிகளின் நிர்வாகிகள் மாநாடு.* மூன்று சட்டமன்ற தேர்தல் + மூன்று மக்களவை தேர்தல் + இரண்டு உள்ளாட்சி தேர்தலென எட்டு தேர்தல்களில் எட்டுத்திக்கும் எஸ்டிபிஐ என்கிற நான்கெழுத்து மந்திரச் சொல்லை ஒலிக்கச் செய்திருக்கிறது எஸ்டிபிஐ. ஒரு தேசிய கட்சி வட மாநிலங்களில் தனது பலத்தை நிரூபிப்பது பெரிய விடயமல்ல, ஆனால் உலகமே உற்று நோக்கும் தமிழக அரசியலில் தனது கால் தடத்தை பதிப்பதென்பது அவ்வளவு சாதாரண அரசியலல்ல. அதை செவ்வென செய்து காட்டி தமிழக அரசியல் கட்சிகள் வாய்தோறும் முழங்க விட்டிருப்பதுதான் பலம் பொருந்திய மாபெரும் அரசியல் வளர்ச்சி. இதன் மூலமாக சிலருக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம், சிலருக்கு மூளை முக்கால்வாசி செயலிழந்து போயிருக்கலாம், சிலர் இவர்களை தவிர்க்க முடியாது அரவணைத்து கொள்ளலாம் என யூகித்திருக்கலாம்.

இதுவரை சந்தித்த தேர்தல்களில் நிர்வாகிகளின் கட்டமைப்பை மட்டுமே நம்பி களம் கண்ட எஸ்டிபிஐ, *இன்று நேர்த்தியான தேர்தல் கட்டமைப்பில் செங்கல்களை அடுக்கி சிமெண்ட் கலவையை பூச தொடங்கியிருக்கிறது. கேள்வி ஞானம் என்கிற தொடக்கத்தை முடித்துவிட்டு, இன்று  Professionaly they are READY என்கிற பாதையில் காலடி எடுத்து வைத்து விட்டனர்.* தரிசு நிலத்திலேயே விவசாயம் செய்யும் எஸ்டிபிஐ என்கிற வல்லமை, இன்று நீரூற்றி உரமிட்டு சரியான விதையை மரமாக்காமல் தூங்க மாட்டார்கள் என்கிற கலக்கத்தை பிறருக்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

எவ்வழியே எப்படி வந்தார்களோ, அவ்வழியே அப்படியே கூச்சல் குழப்பம் தொல்லையில்லாமல் அமைதியாக பரிட்சை எழுதிவிட்டு கலைந்திருக்கிறார்கள் எஸ்டிபிஐ’யினர்.

ஐம்பது காலகட்டங்களில் காங்கிரஸ் காலம்…
ஏழுபது காலகட்டங்களில் திராவிட காலம்…
இருபதாம் நூற்றாண்டுகளில் மதவாதிகளின் காலம்…
*21ம் நூற்றாண்டுகளில் எஸ்டிபிஐ’ன் காலம் என சூளுரைத்திருக்கிறார்கள்.*

களமும் மாறும்…
காலமும் மாறும்…

கள ஆய்வு தொகுப்பு:

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.

By TN NEWS