Sun. Oct 5th, 2025


வேலூர் மாவட்டம், குடியாத்தம் – செப்டம்பர் 11

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 27, 28-வது வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் இன்று (செப்டம்பர் 11) காலை பேரணாம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கி. பழனி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார். 28-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜி. எஸ். அரசு வரவேற்றார்.

நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.

இதற்காக வருவாய், நகராட்சி, மின்சாரம், வேளாண்மை உள்ளிட்ட 13 அரசு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்றனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS