நெசவுத்தொழிலாளர்கள் குறைகளை தீர்க்க “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் கவுண்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் SDPI தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..!
தென்காசி மாவட்ட SDPI கட்சியின் தொகுதி தலைவர், செயலாளர் மற்றும் நகர தலைவர், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தென்காசியில் மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தென்காசி தொகுதி செயலாளர் செய்யது அலி பாதுஷா, துணைச்செயலாளர் ஜாஹிர் உசேன்,கடையநல்லூர் தொகுதி செயலாளர் ஷாஜித் அலி, வாசு தொகுதி தலைவர் அப்துல் ஹமீது, ஆலங்குளம் தொகுதி தலைவர் விஸ்வா ஹாஜா, செயலாளர் அப்துல் அஜீஸ், தென்காசி நகர செயலாளர் ஷேக் மைதீன், கடையநல்லூர் நகர செயலாளர் தாஜூ தீன், செங்கோட்டை நகர தலைவர் திவான் ஒலி, முதலியார்பட்டி நகர தலைவர் ஜவகர் அலி, நகர செயலாளர் நதீம் , சுரண்டை நகர தலைவர் அப்பாஸ், நகர செயலாளர் அமல்ராஜ், வடகரை நகர தலைவர் முகம்மது இஸ்மாயில், நகர செயலாளர் யாசின், அச்சன்புதூர் நகர செயலாளர் கரீம், ஆகியோர் கலந்து கொண்டு தொகுதி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் -1
எதிர்வருகின்ற செப்டம்பர் -13 , திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான 234 தொகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் BLA-1 மாநாட்டில் தென்காசி மாவட்டத்திலிருந்து அனைத்து தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
தீர்மானம் -2
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவுத்தொழில் நடைபெற்றுவருகின்றது. மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்ற பல்வேறு காரணங்களினால் தொழிலை தொடர முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் , பொதுமக்களின் குறைகளை தீர்க்கும்”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கவுண்டர்கள் அமைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் நெசவு தொழிலாளர்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு இனி வரும் முகாம்களில் நெசவுத்தொழிலாளர்களுக்கான “கவுண்டர்கள் ” அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் -3
தென்காசியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆர்.சி. சர்ச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தையின் நுழைவுவாயிலை அமைக்க கூடாது மற்றும் ஆர்.சி உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகில் அமைக்கப்படும் ரேஷன் கடை உள்ளிட்ட பிரச்சனைகள் சம்மந்தமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கும் இடையில் நடைபெற்று வரும் பிரச்சனைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரு தரப்பு விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு இரு சமூகங்களுக்கு மத்தியில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் பாஜக உள்ளிட்ட தொண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக்முகம்மது ஒலி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்