திண்டுக்கலில் தவெக நிர்வாகி அர்சிதா கைது – 11 சவரன் நகை திருட்டு வழக்கு பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் மேல்புறம் ஒன்றிய தவெக இணைச் செயலாளராக இருந்த அர்சிதா, நகை திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தகவலின்படி, ஒரு வீட்டிற்கு விருந்தினராக சென்ற அர்சிதா, “பாத்ரூம் செல்ல வேண்டும்” எனக் கூறி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீட்டில் இருந்த 11 சவரன் நகையை திருடியதாக வழக்கறிஞர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், அர்சிதாவை கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது அர்சிதாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்