பழனியில் தெருநாய்கள் தாக்குதல் – 4 வயது சிறுவன் காயம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனி ராவுத்தர் கறிக்கடை சந்து, கோட்டைமேடு தெரு பஷீர் கடை சந்து அருகே இன்று அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை, திடீரென சுற்றித் திரிந்த தெருநாய்கள் தாக்கி கடித்தன. சிறுவன் குதறப்பட்ட நிலையில் துடித்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர்.
பின்னர் காயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் – ராமர் செய்தியாளர்