நெல்லை மாவட்ட செய்திகள்:
நெல்லை, செப்டம்பர் 7:
நெல்லை சந்திப்பு இரட்டை மேம்பாலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானதால் துயர்ச்சி நிலவுகிறது.
நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த சாதிக் (22), சந்தோஷ் (22), லோகேஷ் (23, வையாபுரி நகர்) ஆகிய மூவரும் இரவு 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர்.
அப்போது தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அப்பகுதியில் வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேக் முகைதீன்.