செப்டம்பர் 5, குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார். இதில், மாநில துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோ. துரைராஜ் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்டார்.
மேலும், முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர். ரவி, மாவட்ட பொருளாளர் ஆர். ரோஸ் மற்றும் கிராம உதவியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில், வட்டப் பொருளாளர் மொ. வீர மணிகண்டன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்