Sun. Oct 5th, 2025

வேலூர் மாவட்டம் – பேர்ணாம்பட்டு
அரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.
செப்டம்பர் 5

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் அவர்கள், கடந்த வாரம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அரவட்லா மலை கிராமத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது கிராம மக்களிடம் பேசும்போது, சட்டவிரோதமான நாட்டுத் துப்பாக்கி வைத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சல் அல்லது விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அந்நேரத்தில், கிராம இளைஞர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் விளையாட்டு உபகரணங்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்படி, பேர்ணாம்பட்டு டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் இரா. பிரபு ஆகியோர் இணைந்து, நேற்றைய தினம் அரவட்லா மலை கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை காவலர் நாகேந்திரன், ஊர் பெரியோர்கள், வாலிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS