Sun. Oct 5th, 2025



கேரளாவில் அமீபிக் வைரஸ் பரவிய நிலையில் – மாநகராட்சி அலட்சியத்திற்கு மக்கள் கடும் கண்டனம்

திண்டுக்கல் R.M.காலனி சிவாஜி கணேசன் 2-வது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

கேரளாவில் அமீபிக் வைரஸ் பரவியுள்ள நிலையில், திண்டுக்கல்லிலும் புதுவகை தொற்றுநோய் உருவாகும் ஆபத்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த பிரச்சனைக்கு எத்தனை முறை புகார் கொடுத்தாலும் மாநகராட்சி நிரந்தர தீர்வு எடுக்கவில்லை. மக்கள் உயிரை ஆபத்தில் தள்ளும் அலட்சியத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மாநகராட்சியின் கடமை. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் தொற்று பரவலுக்கு நிர்வாகமே பொறுப்பாகும்” என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

📰 திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் – ராமர்



 

By TN NEWS