📌வேலூர் மாவட்டம், செப்டம்பர் 3:
குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா சாமுண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி (45) இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டுப் பாத்ரூம் செல்லும்போது, தவறுதலாக விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அவரை காப்பாற்றச் சென்ற தம்பி ஜெயக்குமார் கூட மின்சாரம் தாக்கி கடுமையாகக் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக குடியாத்தம் கிராமிய போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
⚠️ மின்வாரிய அலட்சியம் – மக்களின் குற்றச்சாட்டு
கிராமத்தில் பலமுறை மின்கம்பிகள் பழுதடைந்து தொங்குவது, முறையாக பராமரிப்பு இல்லாதது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இன்று ஒரு தொழிலாளி உயிரிழக்க நேர்ந்துள்ளதாக மக்கள் வலியுறுத்துகின்றனர்.
“மின்வாரியம் சற்றும் கவனம் செலுத்தியிருந்தால், திருப்பதி உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். ஏழை குடும்பம் சிதறி விட்டது. மின்வாரியம் பொறுப்பேற்று உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
🙏 மனிதாபிமான கோரிக்கை
திருப்பதியின் குடும்பம் மிகுந்த வறுமையில் உள்ளது.
குடும்பத்துக்கு அரசு மற்றும் மின்வாரியம் சார்பில் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.
காயமடைந்த ஜெயக்குமாரின் மருத்துவச் செலவுகளை முழுமையாக அரசு ஏற்க வேண்டும்.
எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மின்கம்பிகள் பராமரிப்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
✍️ செய்தி: குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்,
கே.வி. ராஜேந்திரன்