Sun. Oct 5th, 2025

 

கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்து பற்றாக்குறை: முதல்வருக்கு CITU சங்கம் மனு

மேட்டுப்பாளையம்:

கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்துகள் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியுறுவதாக, மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU பொது தொழிலாளர் சங்கம் முதல்வரிடம் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பாஷா குறிப்பிடுகையில்:

“கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி, அதேபோல மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால், குறிப்பாக காலை, மாலை வேலை நேரங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் இந்த நிலைமையால் பாதிக்கப்படுகின்றனர். பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தச் செயல்திறன் கொண்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது மனுவில்,

1. காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்கப்பட வேண்டும்.


2. பொதுமக்களின் குறைகளை அலட்சியம் செய்யும், தவறான தகவல்கள் தரும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


3. அரசின் நலத் திட்டங்கள் சீராக நடைமுறைப்படுத்த வலுவான கண்காணிப்பு அமைய வேண்டும்.

எனக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிகள் மாநில போக்குவரத்து துறை இயக்குநர், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போக்குவரத்து மேலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தகவல் பரவலுக்காக ஊடகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

சேக் முகைதீன் – இணை ஆசிரியர்

தமிழ்நாடு டுடே ஊடகம் – சென்னை.

By TN NEWS