*மாபெரும் மற்றோர் ஊழல்*
நீங்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடா விட்டாலும், எந்தத் தேர்தலிலும் ஒரு தொகுதியிலும் வெற்றியே பெறாவிட்டாலும் கூட, ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி நடத்துவது நல்ல லாபம் தரக்கூடியதுதான்.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தமக்குக் கிடைத்த நிதி ஆதாரத்தையும் செலவு செய்த விவரங்களையும்கூட அவை மக்களுக்குத் தரத் தேவையில்லை.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே வருமான அறிக்கைகளை தாக்கல் செய்தால் போதும். மேலும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அவை வருவதும் இல்லை.
இந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி, நீங்கள் இதுவரை கேள்விப்படாத *பத்து லெட்டர்பேட் அரசியல் கட்சிகள்*, குஜராத்தில் *4300 கோடி* நன்கொடை பெற்றுள்ளன.
(குஜராத் மாடல்!)
இதை தைனிக் பாஸ்கர் எனும் பத்திரிக்கை புலனாய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளது.
சுவையான விஷயம் என்னவென்றால்…
1. *இந்தப் பத்து அரசியல் கட்சிகளுக்கு 2019-20க்கும், 2023-24க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 4300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது*
2. *அந்தத் தொகையில், அதிகாரப்பூர்வமாக, 39 லட்சம் மட்டுமே செலவிட்டுள்ளதாகக் காட்டியுள்ளன. ஆனால், அவர்களின் தணிக்கை அறிக்கை 3500 கோடியை செலவிட்டுள்ளதாகக் காட்டுகிறது*.
3. *2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 2022 சட்டமன்றத் தேர்தலிலும் இக்கட்சிகள் களமிறக்கிய வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 மட்டுமே. இவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 54069 மட்டுமே!*
4. *முன்பின் தெரியாத இந்தப் பத்துக் கட்சிகளுக்கு, – 46 வேட்பாளர்கள் சுமார் 100-1200 வாக்குகளை மட்டுமே பெறக்கூடிய அட்ரஸ் இல்லாத கட்சிகளுக்கு – 4300 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? அது எங்கே போனது?*
தேர்தல் ஆணையம் இப்போது இந்த குஜராத் மாடல் ஊழல் விஷயத்தில் என்ன செய்யப்போகிறது?
இந்தப் பத்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, 4300 கோடி எங்கிருந்து வந்தது, எங்கே எப்படி செலவிடப்பட்டது என்பதைக் கண்டறிய முயற்சிக்குமா?
(Vinod Chand என்பவரின் பதிவின் அடிப்படையில் தகவல்கள் திருத்தப்பட்ட தமிழாக்கம்.)
கட்சிகளின் பெயர்களையும் பெற்ற தொகைகளையும், கிடைத்த வாக்குகளையும் அட்டவணையில் பாருங்கள்.
ராமர் – திருச்சிராப்பள்ளி