Fri. Nov 21st, 2025



பட்டாக்கத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் பரபரப்பு

திண்டுக்கல்:
தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ. சூரியகலா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அகரம், கருங்கல்பட்டி கல்லறை அருகே, கையில் பட்டாக்கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேர் போலீசாரைக் கண்டு தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் வலை வீசிச் சுற்றியதும், அவர்கள் பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அகரம் அச்சாம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா (33), கார்த்திக் (29) எனவும், சாலையில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்ய சதி செய்ததும் தெரியவந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள்: ராமர், திருச்சிராப்பள்ளி

By TN NEWS