வேலூர்:
குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் 34வது வார்டில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை, ஆகஸ்ட் 26 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற உறுப்பினர் ராணி பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், நகர மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன், ஆட்டோ மோகன், டிஸ். ரகு, ஒப்பந்தார் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா