Tue. Aug 26th, 2025

வேலூர்:
குடியாத்தம் ஒன்றியம் எர்த்தாங்கல் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை நடைபெற்ற இம்முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

முகாமினை எம்.எல்.ஏ. அமுலு விஜியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டாட்சியர் கி. பழனி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, எர்த்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இம்முகாமில் மகளிர் உரிமைத் திட்டம், இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, ஓய்வூதியம், மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

முகாமில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், 13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இறுதியில் ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.

செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா



By TN NEWS