தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே. கமல் கிஷோர், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ. ராஜா,
வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில்,
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள்,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள்
கலந்து கொண்டு ரூ.10.91 கோடி மதிப்பிலான 18 புதிய கட்டிடங்களை திறந்து வைத்து,
மேலும் ரூ.6 கோடி மதிப்பிலான 5 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவைகள் மேலும் வலுப்பெற்று, பொதுமக்கள் நலனில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
✍️ அமல்ராஜ்
முதன்மை செய்தியாளர்,
தென்காசி மாவட்டம்