Sun. Aug 24th, 2025

வேலைவாய்ப்பு – கல்விச்செலவை ஏற்கும் நடவடிக்கை

சென்னை, கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி அவர்களின் குடும்பத்தினரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வரலட்சுமியின் கணவருக்கு விரைவில் சென்னை மாநகராட்சியில் பணி வழங்கப்படும்.

அவர்களின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்று நடத்தும்.

குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு மற்றும் கட்சியினர் சார்பில் வழங்கப்படும்.


இதன் மூலம் துயரத்தில் இருக்கும் குடும்பம் நிம்மதி அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.


ராமர் – திருச்சிராப்பள்ளி

 

By TN NEWS