Thu. Aug 21st, 2025



சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி வரும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அறையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த முயன்றனர்.

அந்த நேரத்தில் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர், பூட்டை உடைத்து உள்ளே செல்ல முடிவு செய்தனர். ஆனால், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் சாவியை வழங்கியதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அறைக்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனைக்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🖊️ ராமர்
செய்தியாளர், திருச்சி


 

By TN NEWS