Thu. Aug 21st, 2025


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தாமோதரன்–ரம்யா தம்பதியினர், பிரசவ சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனை (பொன்ரா நர்சிங் ஹோம்) சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் திவ்யாவிற்கு, மருத்துவர்கள் தேவையான கவனத்தையும் சரியான சிகிச்சையையும் அளிக்காததால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

அதிகப்படியான செலவினங்களும், மன உளைச்சலும் ஏற்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட திவ்யா, தனது வழக்கறிஞர் பிரம்மா மூலம், சுரண்டை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பிறவிபெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப் பிரியா, மருத்துவ அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட திவ்யாவிற்கு ₹3 லட்சம் இழப்பீடு மற்றும் ₹10 ஆயிரம் வழக்கு செலவினம், மொத்தம் ₹3.10 லட்சம், 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், உத்தரவை மீறினால், அந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 9% வட்டி சேர்த்து மருத்துவர் காசிராணி மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

🖊️ அமல்ராஜ்
முதன்மை செய்தியாளர், தென்காசி மாவட்டம்



 

By TN NEWS