திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவல் பரவியதும், திரளான திமுக கட்சி தொண்டர்கள் அமைச்சர் இல்லத்துக்கு வந்து திரண்டு உள்ளனர்.
இதேவேளை, சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அறையின் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தீர்மானித்துள்ளனர்.
🖊️ ராமர்,
திருச்சி மாவட்ட செய்தியாளர்