வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடந்த 15.8.2025 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உலக திருவள்ளுவர் பேரவை தலைவர் வைரா. ஜெ. அன்பு தலைமை தாங்கினார்.
திருக்குறள் திருப்பணிக்குழு பொறுப்பாளர் முனைவர் பா. சம்பத்குமார் வரவேற்புரை வழங்கினார்.
பாவேந்தர் பேரவை செயலாளர் புலவர் சு. மோகன் குமார் சிறப்புரையாற்றினார்.
மேலும்,
தமிழ் இயக்க நகரச் செயலாளர் ஜெ. தமிழ் செல்வன்
ஒன்றியச் செயலாளர் முனைவர் மோ. மது
பள்ளிகொண்டா தேர்வுநிலைச் செயலாளர் சண்முக. பாலசுந்தரம்
உலக திருவள்ளுவர் பேரவை பொருளாளர் இரா. ஜெயக்குமார்
கிரீன் வேலி பள்ளிகள் தலைவர் ஜாவித்
தாளாளர் முனைவர் ஆயிஷா ஜாவித்
ஆசிரியர் பார்வதி, ஆசிரியர் சிவசங்கரி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் புலவர் பா. முகமது அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சாதனை கல்வி மைய முதல்வர் லோ. ஜமுனாசம்பத்குமார் நன்றியுரை ஆற்றினார்.
விழாவில் திருக்குறள் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை தோறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை, 30 வாரங்களுக்கு திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
பயிற்சி நிறைவில், அனைத்து பயிற்சி மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்